A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

முட்டாள்கள் தின வரலாறு

Posted by : Mithran on | Apr 01,2021

ஆதியில் இங்கு எல்லோருக்கும் எல்லாமும் என்றுதான் தொடங்கியது. பறித்துக்கொண்டவன்

பறிகொடுத்தவனுக்கு வைத்த பெயர் முட்டாள். பறிகொடுத்தவன் பறித்துக் கொண்டவனுக்கு வைத்தப் பெயர்

புத்திசாலி. இருந்தாலும் முட்டாள்கள் தினத்திற்கான வரலாறு இதுதான்.

 

உலகம் முழுவதும் அந்தந்தப் பகுதி மக்கள் புத்தாண்டின் துவக்கத்தை பல்வேறு விதமாக கொண்டாடி வந்தனர்.ஐரோப்பாவில் ஜூலியன் என்ற கிரேக்கக் கடவுளை மையமாக வைத்து ஜூலியன் காலண்டர் உருவாக்கப்பட்டது.அதன் படி ஐரோப்பியர்களுக்கு ஏப்ரல் 1 தான் புத்தாண்டாக இருந்தது.

 

ஜூலியன் பெயரைக் கொண்டவர்  தான் கி.மு.45 ரோமப் பேரரசராக இருந்த ஜூலியஸ் ஜீசர் என வரலாற்றில் அறியப்படுபவர். இவரே நாட்காட்டியை வடிவமைத்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த ஜூலியஸ் சீசர் தான் உலகின் முதல் சிசரியன்(அறுவைச் சிகிச்சை) மூலம் பிறந்த குழந்தை. எனவே ஜூலியஸ் ஜீசர் என்று அழைக்கப்படுகிறார். 

 

இவர் உருவாக்கிய நாட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரசெப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஏப்ரல் 1 புத்தாண்டாக இருந்தது.

 

ஜூலியஸ் சீசரினால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கேற்ப, சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய புதிய நாட்காட்டி உருவாக்கப்பட்டது. 

 

இந்த நாட்காட்டிக்கு கிரிகோரியன் நாட்காட்டி என்று பெயர். இதுதான் இப்போது உலகம் முழுமையும் பயன்பாட்டில் இருக்கிறது. உலகம் முழுமைக்கும் பொது நாளை உருவாக்கவேண்டும் என்ற ஐரோப்பியத் திமிரின் வெளிப்பாடாக உருவான கிரிகோரியன் காலண்டர் முறை 1582 பிப்ரவரி 29 அன்று கிரிகோரி என்ற கத்தோலிக்க போப் ஆண்டவர் மூலமாக அமுல்படுத்தப்பட்டது.

 

ஐரோப்பியர்கள் உலகம் முழுமையும் தங்கள் ஆதிக்கத்தை 15 ம்  நூற்றாண்டில் நிலைநிறுத்தத் துவங்கிய காலம்.வாஸ்கோடகாமாவின் இந்திய வருகையும் ( 1498 மே 20 ம் தேதி வெள்ளிக்கிழமை) அந்தக் காலத்தில் தான் என்பதை மறக்கவேண்டாம்.

 

கிரிகோரியன் நாட்காட்டியானது மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப் பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.

 

ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. 

 

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

 

சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்னூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப் (நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்னூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். 

 

பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. ஜூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.

 

பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. 

 

ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.

 

இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. 

 

இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டியானது,மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.

 

கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்த நாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். 

 

இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறு வேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில் கொள்வதே காரணமாகிறது.

 

கிரிகோரியன் நாட்காட்டி 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. 

 

சனவரி mēnsis Iānuārius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். தொடக்கத்திற்குரிய ஜனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்.

பிப்ரவரி (பொதுவாக 28 நாட்கள் நெட்டாண்டில் (leap year) 29 நாட்கள்), mēnsis Februāriusஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். பெப்ருவா மாதம்.

ரோமானியத் தூய்மைத் திருவிழா.

 

மார்ச்  mēnsis Mārtius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "செவ்வாய் கோள் மாதம். ரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம்.

ஏப்ரல் mēnsis Aprīlisஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். உறுதியில்லா பொருள் , ஏப்ரோடைட் என்ற ரோமானியக் கடவுள் பெயரை குறிக்கும் மாதம்.

 

மே mēnsis Māius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "விவசாயத்துக்குரிய பெண் கடவுளான மயாவின் மாதம்.

ஜூன் mēnsis Iūnius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "ஜூனோ மாதம்.திருமணம், குழந்தை பிறத்தல், மற்றும் ஆட்சி செய்தலுக்கான ரோமானிய பெண் கடவுள்.

 

ஜூலை mēnsis Iūlius என்ற லத்தீன் மொழியிலிருந்து, "ஜூலியஸ் சீசரின் மாதம்", ஜூலியஸ் சீசர் பிறந்த மாதம்.

ஆகஸ்ட் mēnsis Augustus என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "அகஸ்தஸ் மாதம்.

 

செப்டம்பர் mēnsis september என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஏழாவது மாதம்.

அக்டோபர் mēnsis octōber என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் எட்டாவது மாதம்.

 

நவம்பர் mēnsis november என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம்.

திசம்பர் mēnsis december என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதம்.

 

கிரிகோரியன் காலண்டர் முறைப்படி ஜனவரி 1 புத்தாண்டாக சொல்லப்பட்டது. அதை ஏற்கமறுத்து ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்றனர்.ஏப்ரல் 1 ம் தேதி புத்தாண்டை கொண்டாடியவர்கள் வீடுகளுக்கு வெற்றுப் பரிசுப் பெட்டிகளை அனுப்பி வாழ்த்துச் சொன்னார்கள்.

 

அதை திறந்தால் ஏதும் இருக்காது.நீ ஒரு முட்டாள் என்று எழுதி இருக்கும்.

வேறொன்றுமில்லை.

உலகை ஐரோப்பியர்கள் முட்டாள் ஆக்கிய தினமாகவும் கொண்டாடலாம்.

இதை ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்கிறார்கள். 

 

ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. ஐரோப்பிய புத்தாண்டே. ஆங்கிலப் புத்தாண்டு என்பதும் ஆதிக்கம் சார்ந்த சொல்லாடல் தான். ஐரோப்பாவில் பல்வேறு மொழிகள் உண்டு. பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலத்தை ஏற்பதே இல்லை.

 

இங்கு எதுவும் ஏற்கப்பட்டதல்ல. அதிகாரம் மூலம் திணிக்கப்பட்டதே. 

தமிழருக்கும் தை மாதமே புத்தாண்டு.

யுகாதி, கொல்லம், ஹிஜிரி என்று அவரவருக்கும் புத்தாண்டுகள் உண்டு.

"மித்திரன்" ஸ்ரீ ராம் 

Comments